எந்த காலத்திலும் கலை பொக்கிஷங்களை அதிமுக விட்டு கொடுக்காது – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை ஆவடியில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள பொக்கிஷங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கலைபண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்த காலத்திலும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிற்கு அதிமுக அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை தவறாக புரிந்துள்ளார். தமிழகத்தில் தற்போது 39,000 கோவில்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக காலத்தில் கோவில்களை சரியாக கவனிக்காமல் இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் கூடுதலாக கவனம் செலுத்தி புராதன சின்னங்களை பாதுகாத்து வருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025