அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது – ஜெ.தீபா பரபரப்பு பேட்டி!

Default Image

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அந்தவகையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளிலேயே சர்ச்சை உள்ளது. ஜெயலலிதாவின் இழப்பை ஈடுசெய்ய முடியாது.

அதிமுகவில் பிளப்பட்டிருப்பது ஏற்கனவே இருந்த ஒன்றுதான், இது ஒன்னும் புதிதல்ல, ஆனால், ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தற்போது ஒரு சரியான தலைமை இல்லாமல் அதிமுக பிளவுப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது. என்னுடைய மறைவு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார்.

ஆனால், இவர்கள் 100 நாட்கள் கூட நன்றாக ஆட்சி செய்யவில்லை. இதனால் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது. எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய யாரும் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை. ஆறுமுகசாமி பரிந்துரையின்படி, முதலில் நடவடிக்கை எடுக்க படவேண்டியது சசிகலா மீதுதான்.

அதிமுக என்ற கட்சி இனி 100 நாள் கூட இருக்காதுனு நினைக்கிறேன் எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கணித்துள்ளார். மேலும், ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கைக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லாமல் இருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தொடர்பாக உரிய விசாரணையை நடத்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்