நேற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற உரிய நேரத்தில் நிச்சயம் பரிசீலிக்கப்படும். தற்போது அதிமுகவுக்கு இடம்தராவிட்டாலும் இது முழுமையான அமைச்சரவை இல்லை .அமைச்சரவையை தேர்வு செய்வது பிரதமரின் முடிவு என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…