பேரிடர் காலத்திலும் சரி, பெருந்தொற்று காலத்திலும் சரி அதிமுக தான் எப்பொழுதும் மக்களுடன் களத்தில் நிற்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அம்பாள்புரம் மச்சுவாடி மாப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர், கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று உதவிசெய்து வரக்கூடிய அரசு அதிமுக அரசுதான் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்த அவர், புதுக்கோட்டையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் மக்களோடு நின்று பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவது போல, மீண்டும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். புதுக்கோட்டை மக்களுக்கு காவிரி குடிநீரை வழங்கியது அதிமுக அரசுதான் அதுபோல காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் மூலம் காவிரி ஆறை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவந்து பசுமையான பகுதியாக புதுக்கோட்டையை மாற்றுவோம் எனவும் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…