சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலையை தொடர்ந்து, அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டடினர். இந்நிலையில், அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் சசிகலாவை வரவேற்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை அதிமுகவை சார்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இரா.அண்ணாதுரை ஒட்டி உள்ளார். இதற்கு முன் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நெல்லையில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கப்பட்ட நிலையில், இவரும் நீக்கப்படுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று தூத்துக்குடியில்
அதிமுக நிர்வாகி (அதிமுக முன்னாள் பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) ராபர்ட் ஹென்றி சசிகலா வரவேற்று போஸ்டர் ஓட்டினார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…