அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை!ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை
நேற்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.
பின் அதிமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. மேலும் மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தி தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊடகங்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.அதில், கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக பெயரில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கொடுக்கும் பேட்டிகள், செய்திகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துகளை தெரிவிக்க கட்சி நியமித்துள்ள செய்தி தொடர்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.