சட்டப்பேரவையில் பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளிநடப்பு..!
தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி கிடப்பில் இருந்த 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் 13-ஆம் தேதி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதிலளித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு, பல்கலை. துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் அதிமுகவும் வெளிநடப்பு செய்தனர். தனிதீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.