‘உதயசூரியன் உதிக்கும் வரை கனவு காணுங்கள் – கனிமொழி’., “கடைசி வரை கனவு மட்டுமே – அதிமுக”

Default Image

கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு என்ற கனிமொழி கருத்திற்கு, கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு என்று அதிமுக பதில்.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. முக ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கருத்து தெரிவித்த அதிமுக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொண்டதாய், நினைத்து கொண்டே இருங்கள். ஆனால், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம். வெற்று அறிக்கை நாயகன் முக ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி என தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கனிமொழி அவரது பதிவில், வெற்று நாயகன் இல்லை. அடிக்கல் நாயகனான உங்களை வழிநடத்தும் வெற்றி நாயகன்.

கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. விடியும் வரை உதயசூரியன் உதிக்கும் வரை கனவு காணுங்கள் என விமர்சனம் செய்திருந்தார். மீண்டும் இதற்கு பதிலளித்த அதிமுக, அறிக்கை விடாமல் நாங்கள் அடிக்கல் நாயகனாக அனைத்து திட்டத்தையும் துவங்கி செயல்படுகிறோம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆம் கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. பல ஆண்டுகளாக முதல்வர் கனவு கண்டுகொண்டு தானே இருக்கிறார் முகஸ்டாலின். என்ன பயன்? கடைசிவரை கனவு மட்டுமே காண வாழ்த்துக்கள் என பதில் விமர்சனம் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்