அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு! விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம்!

தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் பேசியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jeyakumar TVKVijay

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.

பொதுக்குழுவில் பேசிய அவர் ” நான் மக்களை பார்க்க தடை போட நீங்கள் யாரு? எந்தக்கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எங்களுக்கு தருகிறீர்கள். ஆற்றை தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் அது சூறாவளியாக மாறும். தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் சட்ட ஒழுங்கு இருக்கின்றதா என்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டில் மக்களாட்சி மலரும்.  இவங்கள மாத்தணும். ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே., ஒன்னு TVK இன்னொன்று DMK “என வெளிப்படையாகவே விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் சூழலில், தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் பேசியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ” தமிழ்நாட்டில் எப்போதும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி  நடக்கும். அதிமுக மீது குறை சொல்ல எதுவும் இல்லாததால்  எங்களை பற்றி விஜய் பேசமாட்டிக்கிறார்.

குறையில்லாத காரணத்தால் தான் அதிமுகவை அவர் விமர்சிப்பது இல்லை. திமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மற்றபடி விஜய் தனது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற காரணத்தாலே தொடர்ச்சியாக இதுபோன்று பேசி வருகிறார். தன் கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் பல்வேறு கருத்துக்களை சொல்லலாம். ஆனால், அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு. ஆளும் கட்சியை விமர்சிப்பதால் மட்டுமே மாற்று சக்தியாய் உருவெடுக்க முடியாது. முடிவு செய்பவர்கள் மக்கள் தான்” எனவும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்