அதிமுக – பாஜகவினர்க்கு ஆப்பு வைக்கும் வாக்காளர் பெருமக்கள்….!!!
- அதிமுக – பாஜகவினர்க்கு ஆப்பு வைக்கும் வாக்காளர் பெருமக்கள்.
பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் நன்கு பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வனபுணர்வு சம்பவத்திற்கு எதிராக அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும், சினிமா பிரபாலங்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ” வீட்டில் பெண்பிள்ளைகள் உள்ளார்கள். அதிமுக மற்றும் பாஜாகவினர் ஓட்டு கேட்டு வராதீர்கள் என்ற வாசகம் அடங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.