சசிகலாவை வரவேற்க அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்…!

சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சசிகலா அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்தார். நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், பிப்ரவரி 8.ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்க ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த போஸ்டரில், தொண்டர்களை காக்க வருகை தரும் தியாகத் தலைவி, அதிமுக பொது செயலாளர் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.