மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,ரஜினிகாந்த,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்ததே வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி. வரவில்லை என்றால் கவலையில்லை .அதிமுகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…