அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி !!தேமுதிக வரவில்லை என்றால் கவலையில்லை – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

Default Image
  • அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
  • தேமுதிக  வரவில்லை என்றால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

Image result for அதிமுக தேமுதிக

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால்  தமிழக பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,ரஜினிகாந்த,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்ததே வருகின்றனர்.

Image result for ஜெயக்குமார்

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி. வரவில்லை என்றால் கவலையில்லை .அதிமுகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்