சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று அதிமுக ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அறிவித்துள்ளனர். மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் நிர்வாகிகள் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.