உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும்  – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும்  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெற்றிடம் என்று  அரசியலில் இல்லாதவர்கள் எல்லாம் கூறிக் கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல முடியாது.
உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்