விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்-பன்னீர்செல்வம்
விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர் ஏபுரம் பகுதியில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் சேதமடைந்து இருக்கும் வீடுகளை இடித்து புதிய வீடு கட்டுவதற்கான பணிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.அவர் கூறுகையில், தற்போது இந்த வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற் காக 69 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் தேர்தல் பணி துவங்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஆதரவு தரக்கூடிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.