அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், சைக்கிள் சின்னத்தை பெறுவதே எங்களுடைய தொடர் சட்ட முயற்சி. அது நடந்துகொண்டு இருக்கிறது. அது இறுதிநாள் வரை தொடரும். சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். த.மா.கா. இளைஞர் அணியினர் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்கள் என தெரிவித்திருந்தார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…