அதிமுகவைப் பொறுத்தவரை,பொதுவாக தேர்தலில் இரட்டை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவருமே பார்ம் ஏ மற்றும் பார்ம் பி-யில் கையெழுத்திட வேண்டும் என்ற சூழல் உள்ளது.ஆனால்,தற்போது அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சூழலில்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்,உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, மாநகராட்சி,நகராட்சி மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,இது தொடர்பாக நேற்று ஓபிஎஸ் அவர்கள் ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில்,”உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக ‘பார்ம் ஏ மற்றும் பார்ம் பி’ ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார் எனவும்,ஆனால் அந்த கடிதம் ஈபிஎஸ் அவர்களால் நிராகரிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…