அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் தண்டனை நிறுத்தி வைப்பு..!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அபராத தொகையை ரூ.33 லட்சத்தில் ரூ. 7.5 லட்சத்தை ஜூலை 31-க்குள் செலுத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.