அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் – அமைச்சர் முத்துசாமி
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும், இதுதான் எங்கள் ஆசை என அமைச்சர் முத்துசாமி பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்.27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பிரதான கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு நிகழ்ச்சியில் ஈடுப்டுள்ளனர்.
அந்த வகையில், பிரதான கட்சியின் முதல் வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவிகேஎஸ்.இளங்கோவனை திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமி போன்றோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி அவர்கள், ‘அதிமுகவிற்கு இரட்டைஇலை சின்னம் கிடைக்க வேண்டும், அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.
அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும். 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும், இதுதான் எங்கள் ஆசை என தெரிவித்துள்ளார்.