மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் – மாஃபா பாண்டியராஜன்!
மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக தான் எனவும், தன்னைப் பொறுத்த வரையில் சென்ற முறையே அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டு போனாலும் இந்த முறை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் எனும் எண்ணம் எனக்கு இருக்கிறது எனவும், அதற்கான முழுத்தகுதியும் உடைய பெரிய தோழமைகள் கொண்ட கட்சியாக அதிமுக விளங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.