“தமிழகத்தில் அதிமுக ஆளும் திமுக வாழும்”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Default Image

தமிழகத்தில் அதிமுக ஆளும், திமுக வாழும் என செய்தியாளர் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக கட்சி விழாவில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம், பாஜகக்கு பின்னால்தான் அதிமுக இயங்குகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர். ஆமாம் என தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு பின்னால்தான் மாநில அரசு இயங்குகிறதாகவும், தமிழகத்தில் அதிமுகவே ஆளும் இயக்கம் என்றார்.

அதுமட்டுமின்றி, அவரிடம் செய்தியாளர் இருவர், என்றும் முதல்வர் எடப்பாடி என்ற கருத்தில் மாற்றம் உண்டா? என கேட்ட கேள்விக்கு, இதற்கு அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், அதுகுறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது என தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது அதிமுகவிற்கு பிரகாசமாக உள்ளதாகவும், அதிமுக சிறப்பாக செயல்படுகி காரணத்தினால், திமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும், அதிமுக ஆளும் திமுக வாழும் எனவும் கூறிப்பிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்