2021-ல் அதிமுக ஆட்சி மலரும் ! இதையே ரஜினி அதிசயம் நிகழும் எனக் கூறுகிறார்- முதலமைச்சர் விளக்கம்

2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கமல் 60 விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார்.இவர் கூறிய இந்த அதிசயம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார்.
எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025