சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு
பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது வேளாண் பட்ஜெட் அல்ல
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், இது வேளாண் பட்ஜெட் அல்ல; வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான், விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி. திராவிட மாடல் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எம்ஜிஆர் இருந்தபோது அது எம்ஜிஆர் மாடல், ஜெயலலிதா இருந்தபோது அது ஜெயலலிதா மாடல். இரண்டையும் சேர்த்து தமிழ்நாடு மாடலாக நாங்கள் உருவாக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…