எம்ஜிஆர் பேரன் வி.ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் பொறுப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.!

அதிமுகவில் வி.ராமச்சந்திரன் என்பருக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் (எம்ஜிஆர் பேரன்) வி.ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வி.ராமச்சந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக சார்பில் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிப்படி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை, தற்போது எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025