#ELECTIONBREAKING : அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ..!

Default Image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி மார்ச் 3-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்க்கப்பட்டது.

அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்தனர். அவர்களிடம் ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது. இதனால் கடந்த 5-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேரின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக சார்பில் வெளியிட்டபட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 171 பேர் கொண்ட அதிமுக பட்டியலை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வெளியிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்