உள்ளாட்சி தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் 11, செங்கல்பட்டு 14, ராணிப்பேட்டை 9, விழுப்புரம் 24, தென்காசி மாவட்டத்தில் 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி 18, விழுப்புரம் 11, திருப்பத்தூர் 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.