பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!
ADMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?
இதனை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன்படி, 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலும், 17 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலுடன் விளவங்கோடு இடைத்தேர்தளில் போட்டியிடும் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டது.
Read More – மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலுக்கான அக்கட்சியின் 113 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- நாடு முழுவதும் உள்ள ஏழைப் பொருளாதாரப் பின்னணியில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
- சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
- நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வை அதிமுக முன்மொழிகிறது.
- ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
- தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும்.
- வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம் அமைக்கப்படும்.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற நடவடிக்கை.
- இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை.
- மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
- அதிமுக தற்போதைய வடிவத்தில் CAA ஐ எதிர்க்கிறது.
- மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான நிதிப் பகிர்வு 60:40லிருந்து 75:25 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
- விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை.
- விவசாயிகளுக்கு ஓய்வூதியம்.
- மதுரையில் ஐஐடி மற்றும் ஐஐஎம் நிறுவுதல்.
- கோவையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை.