பழசுக்கு பெயின்ட் அடிப்பதுதான் அதிமுக ஆட்சி- ஸ்டாலின் விமர்சனம் ..!
சிவகங்கை மாவட்டம் கே. வைரவன்பட்டியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட 2000 மினி கிளினிக்குகள் எங்கே தொடங்கப் பட்டுள்ளன..? மினி கிளினிக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..? இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது மினி கிளினிக் நடவடிக்கை தற்காலிகமானது தான் என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது ஏன்..? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் மருத்துவமுகாம் நடத்துவதுபோல ஒப்புக்காக ஒரு கட்டிடத்தை பிடித்து பச்சை பெயிண்ட் அடித்து விட்டால் அது மினி கிளினிக் ஆகிவிடுமா..? இப்படி பழசுக்கு பெயின்ட் அடிப்பதுதான் அதிமுக ஆட்சி புதியதாக எதையும் உருவாகவில்லை என தெரிவித்தார்.