நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மிக மென்மையாக விமரசனம் செய்துள்ளார் .இதனால் அதிமுக பாமக இடையே கூட்டணி காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராமதாஸ் கூறுகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கியது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் மற்ற ஏனைய நிதி ஒதுக்கீடு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் அளிப்பதாகவும் பட்ஜெட் குறித்து ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 18,000 கோடி ரூபாய் நிதி மாநிலத்தின் கடன் 3.15 லட்சம் கோடியாக இருந்தது இதனை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முறை அறிவித்துள்ள பட்ஜெட்டில் அதைவிட அதிக கடன் இருந்தது.இதை கடன் சுமை கவலை அளிப்பதாக இருப்பதாக மென்மையாக கருத்து கூறியுள்ளார். இதனால் அதிமுக பாமக இடையே கூட்டணி ஏற்படும் காரணமே இந்த மென்மையான விமர்சனம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.