#BREAKING: தமிழகம் முழுவதும் 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதாவது வரும் புதன்கிழமை திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர். திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளது.
தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர். நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை அழிக்கலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“விடியல்” தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே ! வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை வஞ்சிக்காதே.
தமிழ் நாட்டு வாக்காளர்களின் உள்ள குமுறல்களை உலகுக்கு உரக்க சொல்லி கழக உடன்பிறப்புகளின் உரிமை குரல் முழக்கம். pic.twitter.com/t8zVUuIg5u
— AIADMK (@AIADMKOfficial) July 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025