தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் அக்.4ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக செய்யார் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3300 ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள திமுக அரசு ஈடுபட்டுள்ளது.
இதனை கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்.4ம் தேதி புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது அரசியல் காரணங்களுக்காகவும், வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், மாண்புமிகு அம்மா அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது என்னென்ன காரணங்களுக்காக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியதோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தற்போது இந்த அரசு மக்கள் விரோத விடியா அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3300 ஏக்கர் விவசாய விளை நிலங்களை சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இந்த செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும், விவசாய விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…