“நன்றி மீண்டும் வராதீர்கள்”.. என்ற ஹேஷ்டேக் உடன் அதிமுக பதிவு.. ட்ரெண்டாக்கி வரும் கட்சியினர்!

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வந்த அதிமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே மோதல் வலுத்திருந்த நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்திய நிலையில், கூட்டணியில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளது.
அதிமுக தலைவர்கள் பற்றி, குறிப்பாக அண்ணா பற்றி அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. இதன் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய, அதேநேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்தார். இதனால், அதிமுகவில் மாறுபட்ட கருத்து நிலவியது.
இதன் காரணமாக கூட்டணி தொடர்பாக உறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். பாஜக மேலிடத்தில் அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் முடிவெடுக்கும் சூழலில் அதிமுக இருந்து வந்த நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று முதல் அதிமுக விலகிக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என கூறினர். இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி முறிவை எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ள அதிமுக “நன்றி மீண்டும் வராதீர்கள்” என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளது கவனத்துக்குரியதாக பார்க்கப்படுகிறது. பாஜவுடனான கூட்டணி முறிவு விவகாரத்தில் “நன்றி மீண்டும் வராதீர்கள்” என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் அதிமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சியினர் டிரண்டாக்கி வருகின்றனர். மேலும், வாழ்த்துக்கள்! மீண்டும் வராதீர்கள் என்று எக்ஸ் தளத்தில் அதிமுகவுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025