அதிமுக-பாமக கூட்டணி!!மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல!!பாமகவில் விலகிய பின் ரஞ்சித் பேட்டி

Published by
Venu
  • மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நான்  விலகுகின்றேன் என்று பா.ம.க மாநில துணைத்தலைவர் ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.

சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித்,கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் .

பல ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த ரஞ்சித் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் வேலை செய்வதை குறைத்துக்கொண்டார்.ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் அணி சண்டையில் ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக இருந்தார்  ரஞ்சித் .பின்பு இரு அணிகள் இணைப்புக்கு பின் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலை இருந்தது.பின்னர் பாமகவில் இணைந்தார்.அவருக்கு பா.ம.க மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக – பாஜக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

நேற்று  பா.ம.க மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரஞ்சித் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் பின்னர்  அவர் கூறுகையில், பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல.கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதிமுகவினரை கீழ்த்தரமாக விமர்சித்தது பாமக .பாமக-அதிமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்கவில்லை.

கூட்டணி தொடர்பாக பாமக தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

Published by
Venu

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

28 minutes ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

1 hour ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

2 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago