கழுத்தில் அதிமுக துண்டு.. முத்து மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த சசிகலா..!

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா தமிழக எல்லைப்பகுதி அருகே வந்தபோது வேறு காருக்கு மாறினார். தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வரும் வழி முழுவதும் சிறப்பான வரவேற்பை கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கினர். நோட்டீசை வாங்கிய வழக்கறிஞர் காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என தெரிவித்தார்.
சசிகலா கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தநிலையில், ஓசூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது சசிகலா தனது கழுத்தில் சிகப்பு ,கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட துண்டு அணிந்து உள்ளார். இன்று மாலை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025