அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு.
கேசி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உரிய விதிகளை பின்பற்றி தான் அவரை நீக்கியுள்ளோம். தன்னை நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதனால் அடிப்படை உறுப்பினராக இல்லாத அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி கேசி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே, அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கேசி பழனிசாமி ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. எனவே, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆகியோர் அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…