#BREAKING : அதிமுக விருப்பமனு நிறைவு.. 8,200 பேர் விருப்பமனுக்கள்..!

அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கியது. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால அவகாசம் குறைக்கப்பட்டது. இதனால், மார்ச் 5-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி வரை சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை காலை 9 மணி முதல் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்படுகிறது. திமுகவில் 8,388 பேர் விருப்பமனு பெற்ற நிலையில்,7967 பேர் பூர்த்தி செய்து விண்ணப்பம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025