யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

elephant

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு மிரண்டு ஓடும் யானை வனப்பகுதிக்குள் நுழைந்தது.

இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு!

அதாவது, ஹைபீம் விளக்குகள் மற்றும் காரின் சத்தம் காரணமாக அந்த யானை பீதியில் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில் ஓடியது. யானை மிரண்டு ஓடும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் மிதுன். எனவே, இந்த வீடியோ வரையிலான நிலையில், அந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை.

வன உயிர் பாதுகாப்பு சட்டம் பிரிவில் அதிமுக பிரமுகர் மிதுன் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, அதிமுக பிரமுகர் யானையை விரட்டும் இந்த சம்பவம் புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றதாக தெரியவந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்