முதல்வர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு பதவியேற்கயுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய உயரதிகாரிகள், எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தனபால், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், உள்ளிட்டோர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் வருகை தந்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…