ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு.
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றி, அதன் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கும் வகையில், கட்சி தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகம் சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறுகையில்,
அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது என்றும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…