அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள் என செல்லூர் ராஜூ பேட்டி.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல, சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட கூடாது.
பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்போம், எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுக தொண்டர்களால் பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். தொண்டர்களின் புனித ஸ்தலமாக அதிமுக தலைமை அலுவலகம் விளங்குகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் பேரில் கட்சியின் பலம் நிர்ணயிக்கப்படாது என தெரிவித்தார். இதனிடையே, அதிமுகவில் அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…