அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை!அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அதிமுக எம்எல்ஏ கேள்வி

Published by
Venu

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.இதனால்  ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார்.

பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்,இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது.மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.மேலும் இடைத்தேர்தலில் 9 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.இதனால் அதிமுக தனது வாக்கு வங்கியை நாளுக்கு நாள் இழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் .ரவீந்திரநாத் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் .ஆனால் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை.தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? 9 எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தியது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Venu

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

10 minutes ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

42 minutes ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

9 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

11 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

12 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

13 hours ago