அதிமுக எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் மரணம்!!
- இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் ஆவார்.இவருக்கு வயது 62 ஆகும்.விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ராஜேந்திரன் காரில் சென்னை சென்று கொண்டிருந்தார்.அப்போது திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.’இந்த சம்பவம் தொடர்பாக காவல்த்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.