குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து..!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அரசியல் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்.பியுமான ரவீந்திரநாத் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.