சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில், பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரக்ள் வெளிநடப்பு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு வருகை தந்திருந்தனர்.
இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனச் சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, இன்றும் சட்டமன்றத்தில் 2-வது நாளாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
நேற்றை போல, இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்னையை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு நான் அனுமதி தருகிறேன். எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு தருவேன். நீங்கள் தாராளமாக பதிவு செய்யலாம்.
4 வருடங்களாக முதலமைச்சராக இருந்த உங்களுக்கு சபை நடவடிக்கைகள் அனைத்தும் நன்றாகவே தெரியும். எனவே, நினைத்த நேரத்தில் நினைத்த தொகுப்பை பற்றி பேசும் இடம் இது இல்லை. நேரம் கொடுப்போம் அப்போது பேசுங்கள்” என்று சபாநாயகர் அப்பாவு கூறியும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், ‘நீதி வேண்டும்’….‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு கொண்டே அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
March 17, 2025