அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முடிவு எட்டப்படாததால் நாளை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு செய்ய நாளை காலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…