அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை.
சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்டுகிறதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டும் ஆளுநரையில் புதிய திட்டங்கள் இல்லை. ஆளுநர் உரை மக்களுக்கு ஏமாற்றத்தை தான் அளித்துள்ளது. நாங்கள் ஆளுநர் உரையை தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை நாங்கள் கேட்க வரவில்லை என தெரிவித்திருந்தார்.