ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடக்கம்!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான், விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர் என தெரிவித்திருந்தார்.