இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள்..!
இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது.
பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டனங்களாக தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்தது ஜனநாயக படுகொலை என கூறி, இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.