அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்-திருமாவளவன் மனு தள்ளுபடி
அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நடைபெற்ற விசாரணையில் ,காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய மாவட்ட தேர்தல் அதிகாரி தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் ,நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளில் பலவற்றில் சான்றோப்பம் இல்லை என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.இறுதியாக அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை தள்ளபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.